tamilnadu

img

பிரான்ஸில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை... இதுவரை 23 ஆயிரம் பேர் உயிரிழப்பு

பாரிஸ் 
ஐரோப்பியக் கண்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அதிக சேதாரத்தைச் சந்தித்த நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் கொரோனா பரவல் வேகம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

மார்ச் 22 முதல் இன்றைய தேதி வரை அங்குப் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உச்சத்தில் இருப்பதால் இயல்புநிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது.  முக்கியமாக பிரான்ஸின் மத்திய பகுதி கொரோனாவால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. தினமும் பிரான்சில் 3000-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை அங்கு 1.65 லட்சமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 400-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 23 ஆயிரத்து 200-யை தாண்டியுள்ளது. எனினும் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவிலிருந்து மீண்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  
 

;