tamilnadu

img

அமேசான் தீ விபத்து குறித்து ஜி7 மாநாட்டில் விவாதம்


அமேசான் தீ விபத்து குறித்து ஜி7 மாநாட்டில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது
உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத காட்டுத்தீ காரணமாக உலகம் முழுவதும் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை ஒட்டி உள்ள பிஸ்கே விரிகுடா பகுதியில் நடக்கும் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் ஜெர்மனி பிரிட்டன் கனடா இத்தாலி ஆகிய நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் உலக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், அந்நிய வர்த்தகத்தில் சுதந்திரங்கள், பாதுகாப்பு பாலின பாகுபாடு போன்றவற்றை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தற்போது அமேசான் காட்டு தீ பற்றி எரிந்தது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விவாதிக்க திட்டமிட்டுள்ளார். இது சர்வதேச பிரச்சனையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

;