tamilnadu

img

அமேசான் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் போர் விமானங்கள்

போர் விமானங்களை உதவியுடன் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் பிரேசில் அரசு ஈடுபட்டுள்ளது.

அமேசானில் உள்ள மழைக் காடுகளில் கடந்த மூன்று வாரங்களாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் பல அரியவகை மரங்கள் மற்றும் விலங்குகள் பலியாகின.
அமேசானில் எற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து பிரான்ஸ் அதிபர் மக்ரோன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் ஆண்டோனியா மற்று சினிமா, விளையாட்டுத் துறை பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமேசானில் உள்ள ரோண்டோனியா உட்பட ஏழு மாகாணத்தில் பிரேசில் அரசு போர் விமானங்களை கொண்டு காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு ஏராளமான தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறதாகவும், இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 15 % முதல் 17 % சதவீத காடுகள் அழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

உலக நாடுகளின் அழுத்தம் அதிகரிக்க காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில் தீவிரமாக ஈடுபட்டது. தீயை அணைக்கும் பணியில் 44 ஆயிரம் ராணுவ வீரர்களை ஈடுபடுத்தி உள்ளது பிரேசில் அரசு. ஜி - 7 மாநாட்டிலும் அமேசான் காட்டுத் தீ குறித்து வருத்தத்தை உலக நாடுகளின் தலைவர்கள் பதிவு செய்தனர். காட்டுத் தீயை அணைக்க பொருளாதாரத் ரீதியான உதவிகளை செய்ய தயார் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
 

;