tamilnadu

img

சர்வாதிகாரப் பிடிக்குள் பொலிவியா - கணேஷ்

பொலிவியாவில் ஜனநாயகத்திற் கான குரல்கள் அதிகரித்து வரும் வேளையில் அதைக் குலைக்கும் முயற்சி யில் கலகக்காரர்கள் இறங்கியுள்ளார்கள்.  கடந்த பத்தாண்டுகளில் நல்ல பொரு ளாதார வளர்ச்சியைக் கண்ட பொலிவியா வில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இடது சாரி வேட்பாளரும், பொருளாதார வளர்ச்சி க்குக் காரணமாக இருந்தவருமான இவோ மொரேல்ஸ் வெற்றி பெற்றார். அந்த வெற்றி க்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட எதிர்க்கட்சிகள், அந்நிய சக்திகளின் உதவியுடன் மொரேல்சை நாட்டை விட்டே வெளியேற்றுவதில் வெற்றியடைந்தன.ஜீனைன் அனஸ் என்ற நாடாளுமன்ற உறுப்பி னர்  தன்னைத்தானே ஜனாதிபதியாக அறி வித்துக் கொண்டுள்ளார்.

ஒட்டுமொத்த பொலிவியாவையே முற்று கைக்கு உட்படுத்தும் வகையில் ஜனநாய கம் கோரிப் போராடுபவர்கள் மீது வன்முறை யைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பழங்குடி மக்கள் மத்தியில் கடுமையான கோபம் நிலவுகிறது. அந்த இனத்தைச் சேர்ந்த இவோ மொரேல்சை பொறுப்பிலிருந்து வெளி யேற்ற நடந்த கலகத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பழங்குடி மக்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தை இறக்கி விட்டிருக் கிறார்கள். போரா டும் பழங்குடி மக்களில் 24 பேர் படு கொலை செய்யப்பட்டுள்ளனர். “ஜனநா யகத்தை மதிக்காமல் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார் இவோ மொரேல்ஸ். 

சட்டப்படி நடந்த தேர்தலில் மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்ற இவோ மொரேல்ஸ், மெக்சிகோவில் தஞ்சம் அடைந் துள்ளார். தனது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான கொடூரத் தாக்குதல்களை நிறுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால் அதெல்லாம் அதிகார வர்க்கத்தின் காது களில் விழவில்லை. பழங்குடி மக்களின் கொடிகளை எரிக்கும் அளவுக்கு பொலி விய ராணுவத்தின் நடவடிக்கைகள் உள்ளன. மக்களால் தேர்வு செய்யப் பட்ட அரசைக் கவிழ்க்க ராணுவம் உடந்தை யானதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் நாடு சர்வாதிகாரப் பிடிக்குள் சிக்கி வருவதையே இது காட்டுகிறது என்று பழங்குடி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

பத்திரமாகத் திரும்பிய  கியூப மருத்துவர்கள்

பொலிவியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை யைத் தரும் திட்டத்திற்கு கியூபா பெரும் உதவியைச் செய்தது. ஏராளமானோர் கண்ணொளி பெற்றனர். சிறப்பு முகாம்கள் மூலமாகப் பழங்குடி மக்களுக்கு ஏராளமான மருத்துவ வசதிகளை கியூபா வைச் சேர்ந்த மருத்துவர்கள்  செய்த னர். பொலிவியாவில் தகுதி வாய்ந்த மருத்துவர்களை உருவாக்குவதிலும் அவர்கள் வெற்றி பெற்றனர். இவ்வாறு பல சாதனைகளைப் படைத்த கியூப மருத்துவர் குழுவைச் சேர்ந்த சில மருத்துவர்கள் பொலிவியாவில் கைது செய்யப்பட்டனர். ஆனால், பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு, பத்திர மாகக் கியூபா திரும்பியுள்ளனர்.

நவம்பர் 17 ஆம் தேதியன்று நாடு முழுவதும் பழங்குடி மக்கள் பெருந் திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கி றார்கள். மீண்டும் மொரேல்சை ஜனாபதியாக பணிநியமனம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சட்டவிரோத அரசைத் தொடரச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன. இந்தத் தலையீட்டுக்கு மெக்சிகோ, அர் ஜெண்டினா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றன. இது அனுமதிக்கப்பட்டால் ஒவ்வொரு நாடாக அமெரிக்காவின் தலையீடு தொடரும் என்பது அந்த நாடுகளின் அச்சமாக இருக்கிறது. மறுபுறத்தில், பொலிவியாவின் இயற்கை வளத்தின் மீது அமெரிக்கா உள்ளிட்ட  நாடுகள் கண் வைத்துள்ளன. குறிப்பாக, உலகின் லித்தியம் இருப்பில் 7 சதவிகிதம் பொலிவியாவில் இருக்கிறது. இது அமெரிக்கா போன்ற நாடுகளின் கண் களை உறுத்திய விஷயமாக இருந்தது. மொரேல்சை வெளியேற்றி விட்டால் அமெரிக் கப் பெரு நிறுவனங்களின் வசம் இந்த லித்தியக் குவியல் வந்துவிடும் என்பதே அவர்களின் கனவாகும். பொலிவிய மக்க ளின் ஜனநாயக விருப்பம் அதைக் குலைத்து விடும் என்றே இவோ மொரேல்ஸ் மற்றும்  அவரின் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.
 

;