tamilnadu

img

இந்திய பெண்ணை கரம் பிடித்த பாக்., கிரிக்கெட் வீரர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கிரிக்கெட் விளையாட்டில் காலடி வைத்த நாள் முதலே இந்திய தேசத்தை விரும்புபவர் போன்று காட்டிக்கொண்டவர்.  உலகக்கோப்பையில் (2019) இந்திய அணி பட்டம் வெல்லும் என டுவிட்டரில் தெரிவித்தது, போட்டிகளின்போது இந்திய வீரர்களுடன் நட்பு பாராட்டியது என பல்வேறு செயல்கள் இதற்கு உதாரணம்.  இந்நிலையில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் பணிபுரிந்து வரும் ஹரியானாவைச் சேர்ந்த ஷமியா அர்ஜூ என்ற பெண்ணை ஹசன் அலி செவ்வாயன்று திருமணம் செய்து கொண்டார். துபாயில் நடைபெற்ற தனது திருமண விழாவில் கலந்து கொள்ள இந்திய வீரர்களுக்கு ஹசன் அலி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் விண்டீஸ் தொடர் மற்றும் காஷ்மீர் பிரச்சனையால் இந்திய வீரர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.  திருமண விழாவின் போது, “இந்திய வீரர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப் பேன்” என்று ஏக்கமாகக் கூறியுள்ளார்.

;