tamilnadu

img

6 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தீவு கடலில் மூழ்கியது -நாசா தகவல்


பாகிஸ்தானில் 6 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தீவு கடலில் மூழ்கி உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் க்வாதார் துறைமுகம் அருகே 2013ம் ஆண்டு 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் 825 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடலுக்கு அடியில் டெக்டானிக் தட்டு நகர்ந்து திடீரென மண், பாறைகள், வாயுவுடன் வெளியேறி ஒரு தீவாக உருவானது. 
ஸல்ஸலோ என பெயரிடப்பட்ட அந்த தீவில் சேறு எரிமலை போல் பொங்கி வந்ததை பலரும் கண்டு வந்தனர். வாயுவோடு எரிமலை உருவான போது அங்கிருந்து மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும் செத்து கிடக்கின்றன.மேலும் சேறு கொதிக்கும் பகுதியில் தீ பற்றவைத்தால் அது வாயு வெளியேற்றத்துக்கு ஏற்ப எரிந்தது. இதற்கிடையில் நிலநடுக்கத்தால் உருவான அந்த தீவு காலப்போக்கில் கடலில் மூழ்கியுள்ளது. செயற்கைகோள் புகைப்படங்களை காலத்துக்கு ஏற்ப ஒப்பிட்டு பார்க்கையில் தீவு இருந்த இடமே தெரியாமல் போயுள்ளது என்று நாசா புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. 
 

;