tamilnadu

img

சீனாவில் விடுதி இடிந்து விழுந்தது 29 பேர் பலி...

பெய்ஜிங் 
சீனாவின் ஷான்க்சி மாகாணத்தில் முக்கிய நகராக இருப்பது லின்பென். இந்நகரில் உள்ள ஓர் இரண்டடுக்கு விடுதி நேற்று (ஆக., 29) திடீரென இடிந்து விழுந்தது. 

இந்த விபத்தில் விடுதிக்கு பிறந்தநாள் கொண்டாட சென்ற நபர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபாடுகளில் சிக்கினர். 2 நாட்களாக நடைபெற்று வரும் மீட்புப்பணியில் 57 பேர் உயிருடன் (காயங்களுடன்) மீட்கப்பட்டுள்ளனர். 29 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் நவீன இயந்திரங்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் பற்றி  ஷான்க்சி மாகாண நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

;