tamilnadu

img

ஈரான் சிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு

டெஹ்ரான், ஜூலை 20 - அணு ஆயுத பரவல் தடை  ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா வுக்கும், ஈரானுக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. அதை தொடர்ந்து ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அச்சுறுத்தி யுள்ளது. இந்நிலையில் சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் கப்பலை கிப்ரால்டார் என்ற இடத்தில் பிரிட்டன் நாட்டு கடற்படை பறிமுதல் செய்து, சிரியாவுக்கு கச்சா எண்ணெய் கடத்தி சென்றதாக குற்றம் சாட்டியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை சிறை பிடிக்க போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்தது. வெள்ளிக்கிழமை பாரசீக வளைகுடாவில் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டி ருந்த பிரிட்டன் எண்ணெய் கப்பலை  ஈரான் கடற்படை சிறை பிடித்தது. ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், புரட்சிகர படை யினரின் எச்சரிக்கையை பொருட் படுத்தாமல் தவறான வழியில் சென்றதால் சிறை பிடித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.  சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் 23 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் 18 பேர் இந்தியர்கள் என  தெரிந்துள்ள நிலையில் ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு தவித்துவரும் 18 இந்தியர்களையும் மீட்கும் பணிகளை இந்திய அரசு  தீவிர எடுத்து வருவதாக வெளியுற வுத்துறை அமைச்சகத்தின் செய்தி  தொடர்பாளர் ரவீஷ்குமார் குறிப் பிட்டுள்ளார்.

;