tamilnadu

img

முத்தம் மூலம் 24 பேருக்கு தொற்றைப் பரப்பிய சாமியார்....

இந்தூர்:
இந்தியாவில், அதிக கொரோனா தொற்று இருக்கும் மாநிலங்களில் 7-ஆவது இடத்தில் மத்தியப்பிரதேசம் உள்ளது. வியாழக்கிழமை கணக்குபடி 10 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆயிரத்து 42 பேர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர். 345 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்து 768 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இங்குள்ள ரத்லம் மாவட்டத்தில் வசித்து வருபவர் “முத்த பாபா” எனப்படும் அஸ்லம் பாபா. தன்னைச்சந்திக்க வரும் பக்தர்களுக்கு கையில் ஒரு முத்தம் தந்து, ஆசி வழங்கி அனுப்புபவர். இந்நிலையில், கொரோனா வந்தபோதும், முத்தம் தருவதை அவர் நிறுத்தவில்லை. மாறாக,தனது முத்தத்தால் கொரோனா வையே விரட்டுவேன் என்று கூறி வந்தார். இந்நிலையில்தான், முத்த பாபாவே தற்போது கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். அதுமட்டுமன்றி தனது முத்தம் மூலம் 24 பக்தர்களுக்கும் அவர் கொரோனா தொற்றைப் பரப்பிச் சென்றுள்ளார். இவர்களில் 13 பேர் நாயபுரா என்ற ஒரே பகுதியைசேர்ந்தவர்கள்.

மேலும் அப்பகுதியில், இதுவரை 4 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர். இதில்,குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும், மக்கள் தொடர்ந்து அந்த சாமியாரிடம் ஆசிபெறத் திரண்டுள்ளனர். அவர் களில் 24 பேர் தனிமைப்படுத்து தலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

;