நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் பார்க்கின்றன.
கொரோனா காலத்தில் டாலரின் மதிப்பு குறைந்து தங்கத்தின் பதிப்பு உயர்வதே இதற்கு காரணம் மற்றும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு,அதாவது தங்க சுரங்கங்களுக்கு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு .இதனால் உற்பத்தி குறைவு ஆனால் தேவை அதிகமாவதால் தங்கத்தின் விலை உயர்வதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.கொரோனா காலத்திற்கு பிறகாவது தங்கத்தின் விலை குறைகிறதா பார்ப்போம்.