tamilnadu

img

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 112 குறைந்தது

சென்னை, செப்.10- பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும்  சர்வதேச அம்சங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த மாத துவக்கத்தி லிருந்தே கடுமையாக உயர்ந்தது. ஒரு மாத  இடைவெளியில் சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்தது. கடந்த 4 ஆம்  தேதி சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய  உச்சத்தை எட்டியது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது. அதன்பின்னர், தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. திங்களன்று(செப்.9) நிலவரப்படி ஒரு சவ ரன் தங்கம் ரூ.29272 என்ற நிலையில் குறைந்திருந்தது. ஒரு கிராம் ரூ.3659 ஆக இருந்தது.

இந்நிலையில், செவ்வாயன்று (செப்.10) தங்கத்தின் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 112  குறைந்தது. ஒரு சவரன் ரூ.29,160என்று விற்பனையானது. ஒரு கிராம் ரூ.3645க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் தங்கத்தின் விலை கடந்த 6 நாட்களில் சவரனுக்கு 960 ரூபாய் குறைந்திருக்கிறது. இதேபோல் வெள்ளி விலை கிலோ 54 ஆயிரத்து 800 ரூபாய் வரை உயர்ந்து, அதன்பின்னர் படிப்படியாக சரியத் தொடங்கி 200 ரூபாய் குறைந்து ஒரு கிலோ  வெள்ளி ரூ.50 ஆயிரத்து 500 ஆக உள்ளது.  ஒரு கிராம் 50 ரூபாய் 50 காசுகளுக்கு விற்  பனையாகிறது.

;