உலகில் சுற்றுலாப்பயணிகள் 2019-ல் அதிகம் பார்வையிட்ட புகழ் பெற்ற நகரங்களின் பட்டியலில் தில்லி 8வது இடத்தில் உள்ளது.
ஹாங்காங் முதலிடத்திலும், லண்டன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த யூரோமானிடர் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் 2019-ஆம் ஆண்டிற்கான சிறந்த 100 புகழ் பெற்ற நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது சுற்றுலா மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி, சர்வதேச தரத்திலான விமான நிலையம் உள்ளிட்ட காரணிகளால் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டுக்கான சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிட்ட நகரங்களின் பட்டியலில் ஹாங்காங் முதலிடத்தில் உள்ளது. இதை அடுத்து, தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரம் 2வது இடத்திலும், சீனாவின் மகவு நகரம் 3வது இடத்திலும், சிங்கப்பூர் 4-வது இடத்திலும், லண்டன் 5வது இடத்திலும், பிரான்சின் பாரிஸ் நகரம் 6-வது இடத்திலும், துபாய் 7-வது இடத்தில், இந்தியாவின் தில்லி 8வது இடத்திலும், இஸ்தான்புல் நகரம் 9வது இடத்திலும், கோலாலம்பூர் 10வது இடத்திலும் உள்ளது.
மேலும், இந்த 100 புகழ் பெற்ற நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் மும்பை, ஆக்ரா, சென்னை, ஜெய்ப்பூர், கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களும் இதில் இடம்பிடித்துள்ளன.