இங்கிலாந்து மதுபான கடையில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க மின்சாரவேலி அமைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் மெட்ரோ செய்தித்தாளில் வெளியாகி உள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது
கார்ன்வால் கவுண்டி பகுதியில் உள்ள தி ஸ்டார் இன் என்னும் மதுபான விடுதியின் முன் புறம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்கள் மதுவை ஆர்டர் செய்யும் பொருட்டு விடுதி ஊழியர்களை நெருங்கி விடாமல் இருக்க மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுபான விடுதியின் உரிமையாளர் மெக்பெடான் மின்சார வேலி தனிமனித இடைவெளிக்காக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கின்றனர். அப்போது வேண்டுமானாலும் மின்சார வேலியானது ஆன் செய்யப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.