ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நேற்று இரவு வெவ்வேறு 6 இடங்களில் துப்பாக்கி சூடு நடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தாக்குதல் நடத்திய ஒருவர் உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மென் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.