tamilnadu

img

10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு

ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ பரவி வருகிறது. காட்டுத்தீ காரணமாக 24 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், காட்டுத்தீயால் சுமார் 480 மில்லியன் விலங்குகள் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், அங்கு கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில், வறட்சி காலங்களில் அதிக அளவு தண்ணீரை குடிக்கும், தென் பகுதியில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபெரல் வகை ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஒட்டகங்களின் கழிவுகளில் இருந்து ஒரு டன் கார்பன்-டை- ஆக்சைடுக்கு நிகரான மீத்தேன் வாயு உருவாவதாகவும், இது உலக வெப்பமயமாதலுக்கு  முக்கிய காரணமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆகையால் 5,000 முதல் 10,000 ஒட்டகங்களை ஹெலிகாப்டரில் பறந்தபடி சுட்டுக்கொல்ல அரசு முடிவெடுத்துள்ளது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு, விலங்குகள் நல ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 

;