tamilnadu

img

பாஜகவுக்கு வாக்களிக்குமாறு ஆயுதம் மூலம் மிரட்டல்!

குவஹாத்தி, ஏப். 10-மணிப்பூரில் அனைவரும் பாஜக-வுக்கே வாக்களிக்க வேண்டும் என்று, ‘குகிதேசிய ராணுவம்’ என்ற ஆயுதம் தாங்கிய கும்பல் மூலம்,அங்குள்ள கிராமத் தலைவர்கள் மிரட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.தாங்கள் உத்தரவு போட்டிருக்கும் கிராமங்களில், 90 சதவிகித வாக்குகள் பாஜகவுக்கு வந்துசேரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட கிராமத் தலைவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று ‘குகி தேசிய ராணுவம்’ என்ற அந்த அமைப்பு கூறியுள்ளது.மணிப்பூரின் முவன்னோபாய் என்ற இடத்தில் கூடிய, கிராமத் தலைவர்களின் கூட்டத்தில், குகி தேசிய ராணுவத்தின் கமாண்டர் எனப் படும் தாங்கோய் ஹயோகிப் என்பவர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். மணிப்பூர் புறநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பென்ஜமின் மேட்டிற்கு அனைவரும் வாக்களித்தாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 1988-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட, குகி தேசிய ராணுவக் கும்பலில், 600 உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

;