tamilnadu

img

ஜனவரியில் ஆட்டோமொபைல் துறை 6.2 சதவீதம் வீழ்ச்சி

உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையானது ஜனவரி மாதத்தில் 6.2 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் சியாம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முழுவதும், ஆட்டோமொபைல் துறை பெரும் வீழ்ச்சி கண்டது. அதே போல், இந்த ஆண்டு ஜனவரியிலும் அதே நிலை தான் தொடர்கிறது. இந்நிலையில், உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையானது ஜனவரி மாதத்தில் 6.2% வீழ்ச்சி கண்டுள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் சியாம் தெரிவித்துள்ளது.  

இது குறித்து சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பயணிகள் வாகன விற்பனையும் சரிந்துள்ளது. கடந்த ஜனவரியில், பயணிகள் வாகன விற்பனையானது 2,62,714 யூனிட்களாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 2,80,091 யூனிட்களாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார் விற்பனையானது 8.1% வீழ்ச்சி கண்டு 1,64,793 யூனிட்களாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 1,79,324 யூனிட்களாக இருந்துள்ளது. இதே மொத்த பிரிவுகளில் வாகன விற்பனையானது 13.83% வீழ்ச்சி கண்டு 17,39,975 யூனிட்கள் ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே ஆண்டில் 20,19,253 யூனிட்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இரு சக்கர வாகன விற்பனையானது, ஜனவரி மாதத்தில் 16.06% வீழ்ச்சி கண்டு 13,41,005 யூனிட்களாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 15,97,528 யூனிட்களாக இருந்தது கவனிக்கதக்கது. இதே போல் மோட்டார் சைக்கிள் வாகன விற்பனையானது 15.17% குறைந்து 8,71,886 யூனிட்களாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 10,27,766 யூனிட்களாக இருந்துள்ளது. ஸ்கூட்டர் வாகன விற்பனையானது 16.21% வீழ்ச்சி கண்டு, 4,16,594 யூனிட்களாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 4,97,169 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல வர்த்தக வாகன விற்பனையானது 14.04% குறைந்து, 75,289 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 87,591 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
 

;