tamilnadu

img

இந்நாள் நவ. 29 இதற்கு முன்னால்

1830 - ஆக்கிரமித்திருந்த ரஷ்யப் பேரரசுக்கெதிராகப் போலந்தில் நடைபெற்ற, நவம்பர் எழுச்சி  தொடங்கியது. 1569இல் உருவான போலந்து-லிது வேனிய காமன்வெல்த் என்பது(விரிவாக வரும் ஜூலை 1இல்), அக்காலத்திய ஐரோப் ்பாவில் பரப்பிலும், மக்கள் தொகையி லும் மிகப்பெரிய நாடுகளுள் ஒன்றாக விளங்கியது.இப்பகுதியின் முக்கியசக்திகளுள் ஒன்றாக விளங்கிய இந்நாட்டில், 18ஆம்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, 1715இல் பிரபுக்களே அரசருக்கெதிராகப் போர் தொடுக்க, ஜார் மகா பீட்டர் தலைமையிலான ரஷ்யா நடுவராக நுழைந்தது. உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேற்பார்வையிடவேண்டிய பொறுப்பு இருப்பதாகக்கூறி, ரஷ்யப் படைகள் போலந்தில் நிறுத்தப்பட்டன.

ஐரோப்பிய அதிகாரச் சமநிலையில் இந்நாட்டின் நிலை முக்கியமானதாக இருந்ததால், இதை மாற்றமின்றிப் பாதுகாப்பது என்று 1730இல் ப்ரஷ்யா, ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தம், மூன்று கருப்புப் பருந்துகளின் கூட்டணி என்று குறிப்பிடப்படுகிறது. 1768-74இல் நடைபெற்ற ஒட்டோமான்களுக்கெதிரான ரஷ்ய-துருக்கியப் போரின்போது, 1772இல் சில பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யா கொண்டுவந்தது, முதல் போலந்துப் பிரி வினை என்றழைக்கப்படுகிறது. ரஷ்யாவும், பிரஷ்யாவும் 1793இல் சில பகுதிகளையும், இவற்றுடன் ஆஸ்திரியாவும் சேர்ந்து 1795இல் எஞ்சிய பகுதிகளையும் பிரித்துக்கொண்ட இரண்டாவது, மூன்றாவது போலந்துப் பிரிவினைகளுக்குப்பின், போலந்து என்ற நாடே இல்லாமற்போனது.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த நாடாளுமன்ற முடியரசு (காங்கிரஸ் கிங்டம்) என்றழைக்கப்பட்ட போலந்தின் பகுதிகள், அக்காலத்தில் இருந்த வற்றிலேயே மிகச்சிறந்த அரசமைப்புச்சட்டங்களுள் ஒன்றைக்கொண்டு, தன்னாட்சி யுடன் இருந்தன. ரஷ்யாவின் முதலாம் அலெக்சாண்டர், இந்த அரசமைப்புச் சட்டத்திற்கும், இப்பகுதியின் நாடாளுமன்றத்திற்கும் கட்டுப்படாமல் பல நடவடிக்கை களை மேற்கொண்டதைத் தொடர்ந்தே இந்த நவம்பர் எழுச்சி ஏற்பட்டது. ஏறத்தாழ ஓராண்டுக்கு நடைபெற்ற இந்த எழுச்சி ஒடுக்கப்பட்டது. போலிய(போலிஷ்) கேள்வி என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் போலந்தின் இருப்பே கேள்விக்குறியான இந்நிலை முதலாம் உலகப்போர்வரை தொடர்ந்தது. ஹிட்லர் போலந்தை ஆக்கிரமித்ததிலிருந்தே தொடங்கிய இரண்டாம் உலகப்போரின்போதும் உயிர்பெற்ற இக்கேள்வி, சோவியத்தால்தான் தீர்க்கப்பட்டது.

- அறிவுக்கடல்