மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சிவப்பு புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சியை ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் புத்தகத்தினை வாசித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.