டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் ஓகியோ பகுதியில் நள்ளிரவு ஒரு மணியளவில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் எல்பாசோ நகரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 20 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.