அமெரிக்காவில், எச்4 விசா வைத்திருப்பவர்களின் வேலை வாய்ப்புக்கு தடை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு, அந்த நாட்டு அரசு, எச் - 1 பி விசா வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்போரின் மனைவி அல்லது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு எச்-4 விசா வழங்கப்படுகிறது. இந்நிலையில், எச்-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களின் பணிபுரிய ஒபாமா ஆட்சி காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமான இந்தியர்கள் பலன் அடைந்தனர். இந்த உத்தரவை எதிர்த்து சமீபத்தில் கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு டிரம்ப் நிர்வாகமும் ஆதரவு அளித்தது.
இதை விசாரித்த நீதிமன்றம், வழக்கை, கீழ் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த வழக்கை, முதல் நிகழ்வில் இருந்து முழுமையாக விசாரித்து பின்னர் இறுதியாக முடிவெடுக்க வேண்டும் என்றும், இதற்கு மனுவை திருப்பி அனுப்புவதே சிறந்தது என 3 நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டுள்ளது.