tamilnadu

img

ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்தது அமெரிக்க ராணுவ விமானம் - அமெரிக்க ராணுவம் அறிவிப்பு

அமெரிக்காவுக்கு சொந்தமான ராணுவ விமானம் கிழக்கு ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்துள்ளதை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் தென்மேற்கு பகுதியில் உள்ள கஜினி மாகாணத்தில், விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விமானத்தில் 83 பேர் இருந்ததாக கூறப்பட்டது.  விபத்துக்குள்ளான விமானம், அமெரிக்க விமானப்படையின் குறியீட்டுடன் இருப்பதாகக் கூறி புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியை தாலிபான் அமைப்பு வெளியிட்டது. அதில் அது "பம்பார்டியர் இ - 11 ஏ" ஜெட் ரக விமானம் என்பதும், அதை அமெரிக்க விமானப்படை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புப்படையின் செய்தித்தொடர்பாளர் தேவ் கோல்ட்ஃபின், ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்த விமானம் தங்களுக்குச் சொந்தமான விமானம் என்று உறுதி செய்துள்ளனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எதிரிகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான தடயங்கள் ஏதும் இல்லை என்றும், விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றும், இது குறித்து கூடுதல் தகவல்களை தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளனர்.

;