வாஷிங்டன், மே 24- அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வரும் வேளையில் ஜனாதிபதி டிரம்ப் விர்ஜினியாவில் அவருக்கு சொந்தமான கோல்ப் கிளப்பில் கோல்ப் விளையாடினார். கொரோனா வைரஸ் பரவலிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், வரும் நாட்களில் 100,000 ஐத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டாலும், அமெரிக்கா இயல்பு நிலைக்குத் திரும்புகிறது என்ற கருத்தை ஊக்குவிக்கவே டிரம்ப் ஆர்வம் காட்டுகிறார். வெள்ளியன்று, வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, கொரோனா வைரஸ் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் டெபோரா பிர்க்ஸ் இந்த நினைவு தின வார இறுதியில் அமெரிக்கர்கள் வெளியே இருக்கலாம், கோல்ஃப் விளையாடுங்கள், டென்னிஸ் விளையாடுங்கள், கடற்கரைக்குச் செல்லுங்கள் - ஆனால் ஆறு அடி இடைவெளியில் இருக்க வேண்டும் என கூறியிருந்தார். அமெரிக்க ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் நாளை (மே 25-ம் தேதி) அமெரிக்காவில் பொது விடுமுறையுடன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.