tamilnadu

img

ஜார்ஜ் பிளாய்ட் படுகொலைக்கு நீதி கேட்டு ஆவேசப் போராட்டம் வாஷிங்டனை உலுக்கிய பேரணி

வாஷிங்டன், ஜுன் 7- அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய பேரணி பிளாய்ட் படு கொலைக்கு நீதி கேட்டும், நிற வெறி- இனவெறிக்கு எதிராக வும் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான மக்களின் கோபாவேச அணி வகுப்பை வெள்ளை மாளிகை முன்பு காவல்துறை அதி காரிகள் தடுத்தனர். ஜார்ஜ் பிளாய்டின் சொந்த ஊரான கலி போர்னியாவிலும் இதுபோன்ற தொரு பேரணி சனியன்று நடை பெற்றது.  எனக்கு மூச்சடைக்கிறது என்கிற ஜார்ஜ் ப்ளாய்டின் கடைசி வார்த்தைகளையே தங்களது முழக்கமாக கொண்டு 12 நாட் களாக அமெரிக்காவில் போராட்ட ங்கள் தொடர்கின்றன. நிறவெறி க்கும் பாகுபாடுக்கும் எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் பரவியுள்ளன.

தலைநகர் வாஷிங்டன் வரலாற்றில் மிகப் பெரிய மக்கள் போராட்டத்தை சனியன்று சந்திந்தது. காவல் துறை நடவடிக்கைக்கு எதிராக வெள்ளை மாளிகை முன்பு பல்லா யிரக்கணக்கான மக்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.  வெள்ளை மாளிகைக்கு அரு கிலுள்ள காபிட்டோல், லிங்கன் நினைவிடம் மற்றும் லாபாயெட் பூங்காவில் கூடியிருந்த போராட்டக் காரர்களை வாஷிங்டன் மேயர் வரவேற்றார். டிரம்பிற்கான ஒரு தெளிவான செய்தியை இத்த னை பெரிய மக்கள் திரள் விடுத் திருப்பதாக அவர் கூறினார். வெள்ளை மாளிகை அருகே பாது காப்பு அதிகாரிகள் போராட்டக் காரர்களை தடுத்தனர். பல்வேறு இனங்கள், நிறங் களைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர். பலர் குடும்பம் குடும்பமாக, குழந் தைகளோடு வந்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் உறுதியான மன எழுச்சி நிலவியதாகவும், இசைக்கருவிகள் இசைக்கப் பட்டதாகவும் ‘நீதி இல்லையேல் அமைதி இல்லை’ என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப் பட்டதாகவும் தெரிவிக்கிறார் பிபிசி செய்தியாளர் ஹீலியர் சியூங். கலிபோர்னியா உட்பட மற்ற  அமெரிக்க நகரங்களும் போராட்டக்காரர்களால் நிரம்பின. பிளாய்டுக்கு நீதிகேட்டும், ட்ரம்ப்பை விமர்சித்தும்  உலகம் முழுவதும் ஏராளமான பிர முகர்கள் சனியன்றும் கருத்து தெரி வித்தனர். நிறவெறிக்கு எதிராக ஆஸ்திரேலியாவிலும் ஜெர்மனி யிலும் போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கினர். ஹாம்பர்க்கில் போராட்டக்காரர் களுக்கு எதிராக ஜெர்மனி காவல்துறையினர் மிளகு தெளிப் பான் பயன்படுத்தினர். 

பிரிட்டனில்....
‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ (கருப்பின உயிர்களுக்கும் மதிப்புண்டு) என்ற பெயரில் நடக்கும் கருப்பின உரிமை இயக்கத்துக்கு ஆதரவாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற சதுக்கத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கொரோனா வைரஸ் தொற்றை தீவிரமாக்கும் என்ற அச்சத்தில் மக்கள் ஒன்றுகூடவேண்டாம் என்று அரசாங்கம் விடுத்த வேண்டுகோளையும் மீறி இந்தப் போராட்டம் நடந்தது. இவை மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆவேச மிக்கப் போராட்டங்கள் நடந்துள் ளன. ஆசியாவிலும் மத்தியக் கிழக்கு நாடுகளிலுமாக இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், துருக்கி, இஸ்ரேல், ஈரான் உள்ளி ட்ட நாடுகளில் ஆவேசமிக்கப் பேரணிகள் நடைபெற்றன.

ஆப்பி ரிக்கக் கண்டத்தில் தென்ஆப்பிரி க்கா, கானா, கென்யா, லைபீரியா,  நைஜீரியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் கருப் பினத்தவரும், வெள்ளை இனத் தவரும், புலம்பெயர் மக்களும் உட்பட அனைத்துத் தரப்பு இளை ஞர்கள், இளம்பெண்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண் டனர்.  பிரான்சில் ஏற்கெனவே பாரீஸ்  நகரில் 25ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பங்கேற்ற பேரணி நடை பெற்றது. மீண்டும் சனிக்கிழமை மாபெரும் பேரணி நடந்தது. பிரிட்டனில் 25 இடங்களில் பேரணி நடைபெற்றது. கிரீஸில் ஏதென்ஸ், டென்மார்க்கில் கோபன் கேஹன், சுவீடனில் ஸ்டாக்ஹோம், பின்லாந்தில் ஹெல்சிங்கி, நார்வே யில் ஆஸ்லோ ஆகிய நகரங்களி பல்லாயிரக்கணக்கானோர் பங் கேற்றனர். இது தவிர இத்தாலி, பெல்ஜியம், ஸ்பெயின், அயர்லா ந்து, போலந்து, லிதுவேனியா, ஸ்லோவேகியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டம் நடைபெற்றது.

;