நியூயார்க் நகரில், கோவிட்-19 பரவல் காரணமாக சுரங்கப் பாதைகள் மற்றும் பேருந்துகளில் கிருமி நீக்கம் செய்ய யூவிசி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
உலகில் அதிக எண்ணிக்கையில் கோவிட்19 தொற்றுக்கு உள்ளான நாடாக அமெரிக்கா இருக்கின்றது. அங்கு அமெரிக்காவின் புகழ் பெற்ற நகரமான நியூயார்க் நகரில் 200,000க்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,000 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த சூழலில், நியூயார்க் நகரில், கோவிட்-19 பரவல் காரணமாக சுரங்க பாதைகள் மற்றும் பேருந்துகளில் கிருமி நீக்கம் செய்ய யூவிசி (அல்ட்ரா வைலட்) விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த யூவிசி விளக்கை, சார்ஸ், எபோலா, இன்ஃப்ளுவன்சா வைரஸ்களை அழிக்கக்கூடியது என்று கூறப்படுகிறது.