tamilnadu

img

47 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த காணாமல் போன மோதிரம்

டெப்ரா மெக்கென்னா என்பவர் 1973ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் தனது காதலன் நியாபமாக வைத்துக்கொள்ள கொடுத்த மோதிரத்தை தொலைத்துவிட்டார்.  இந்நிலையில் தற்போது அமெரிக்கா நாட்டில் தொலைந்த மோதிரம்7800 கி.மீ தொலைவில் இருந்த  ஃபின்லாந்தில் கிடைத்துள்ளது பெரும் நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 
மார்கோ சாரினென் என்ற இரும்பு வேலை பார்ப்பவர் ஃபின்லாந்தில் காட்டுப்பகுதியில் மெட்டல் கண்டறியும் கருவியை வைத்து தேடிக்கொண்டிருக்கும்போது ஒரு மோதிரத்தை 8 இன்ச் ஆழத்தில் கண்டெடுத்தார். அதில் மோரிஸ் உயர்கல்வி  1973 என்று குறிப்பிட்டிருந்தது. 
ஷான் தன்னுடைய கல்லூரி பட்டமளிப்பு விழாவின்போது கல்லூரியில் கொடுத்த மோதிரத்தை காதலி டெப்ராவுக்கு பரிசாய் அளித்தார்.  அவர் அதை ஷாப்பிங் செல்லும்போது தொலைத்திருக்கிறார். அதன்பின் அவர் ஷானை தான் திருமணம் செய்துகொண்டு நாற்பது வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்துள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு ஷான் இறந்துவிட்டார். 
மோதிரத்தை கண்டறிந்தவர் இத்தனை விஷயங்களை அறிந்து டெப்ராவுக்கு கொரியரின் மூலம் அனுப்பியிருக்கிறார். இதையடுத்து 47 வருடங்கள் கடந்து டெப்ராவிடம் வந்துள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.