tamilnadu

img

உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள்!

உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை  கியூஎஸ் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் எனும் அமைப்பு வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் கல்வி கற்க சிறந்த நகரங்கள் குறித்து உலகளாவிய கன்சல்டன்சியான கியூஎஸ் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் எனும் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், வேலைவாய்ப்பு, மாணவர்கள் விரும்பக்கூடியது, கல்வி கட்டணம் குறைவு ஆகிய காரணிகளை கொண்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 

இந்த தரவரிசையில் உலக அளவில் மாணவர்களுக்கான மிகச்சிறந்த நகரமாக மீண்டும் லண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் உள்ள நகரங்கள் பின்வருமாறு: லண்டன், டோக்கியோ, மெல்பெர்ன், முனிச், பெர்லின் மாண்டிரல், பாரிஸ், சூரிச், சிட்னி, சியோல் ஆகியவை உள்ளன.  அதேபோல், இந்தியாவின் பெங்களூரு(81வது இடம்), மும்பை(85வது இடம்), டெல்லி(113வது இடம்), சென்னை(115வது இடம்) ஆகியவை நகரங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 
 

;