tamilnadu

img

புற்றுநோயிலிருந்து தப்பிய அமெரிக்க பெண் - நீச்சலில் சாதனை

புற்றுநோயால் தப்பிய அமெரிக்கா பெண் இடைவிடாமல் நீந்தி புதிய சாதனையை படைத்துள்ளார்.

.அமெரிக்காவை சேர்ந்த 37 வயதான சாரா தாமஸ் சுமார் 54 மணி நேரம் நீந்தி 215 கி.மீட்டரை கடந்துள்ளார்.மார்பக புற்று நோயிலிருந்து தப்பித்த சாரா, சேனலை நான்கு முறை இடைவிடாமல் நீந்திய முதல் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இச்சாதனையானது ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இன்று காலை 6.30 மணியளவில் முடித்துள்ளார். மேலும் சாரா 2017 ஆம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டார். அதிலிருந்து மீண்டு வந்த இவர் இச்சாதனையை செய்துள்ளார். இதனை தொடர்ந்து சாரா, மார்பக புற்றுநோயால் தப்பிய சக ஊழியர்களுக்காக தனது சாதனையை அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.

;