உடல் ஆரோக்கிய விஷயத்தில் நீச்சல் விளையாட்டு மட்டும் சற்று மாறுபட்டதாக இருக்கும். அதாவது ஓட்டப்போட்டி, கால்பந்து போன்ற உந்து விசை செலுத்தும் விளையாட்டுகளில் மாரடைப்பு அதிகம் ஏற்படும். நீச்சலும் இதே வகையிலிருந்தாலும், நீந்தும் போது அதிகம் மாரடைப்பு ஏற்படுவதில்லை. இதனால் நீச்சல் விளையாட்டுகளில் இறப்பு விகிதம் மிகக் குறைவு. குறிப்பாக ஓடுவதை விட நீச்சல் தான் மிகவும் கடினமானது. நீரில் விளையாடும் போது உடலின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தால் இந்த நிகழ்வு உருவாக்குகிறது என எதிர்பார்க்கப்படுகிறது. உடல்நலத்தில் நீச்சல் மட்டும் குறைவான பாதிப்பை ஏற்படுத்துவது ஆச்சர்யமான விஷயமாக உள்ளது. விளையாட்டு உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவது ரக்பி மற்றும் கால்பந்து விளையாட்டுகள் மட்டும் தான்.