tamilnadu

img

வீட்டில் இருப்பவர்களிடமிருந்தே அதிகளவில் பரவும் கொரோனா -புதிய ஆய்வு

கொரோனா வைரஸ் தொற்று வெளிநபர்களிலிருந்து பரவுவதைவிட வீட்டில் இருப்பவர்களிடமிருந்தே அதிகம் பரவுவதாக தென் கொரிய தொற்று நோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர் 

என்ன சொல்கிறது இந்த ஆய்வு:

இந்த ஆய்வில் கொரோனா தொற்று உள்ளான  நோயாளிகள் 5,706 பேரும் அவர்களுடன் தொடர்பிலிருந்த 59 ஆயிரம் பேரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.இதில் நூற்றில் இரண்டு பேருக்கு மட்டுமே வெளியாட்களிடம் இருந்து கோவிட்- 19 பரவியது தெரியவந்துள்ளது, பத்தில் ஒருவருக்கு வீட்டில் உள்ள நபர்களிடமிருந்தே கொரோனா பரவி இருக்கிறது.என்று இந்த ஆய்வு கூறுகிறது.

இதில் 60 மற்றும் 70 வயதுடையவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அவர்களிடம் இருந்தே வீட்டில் இருக்கும் பிறருக்கு கொரோனா அதிகளவில் பரவி இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.இதற்குக் காரணம் இந்த வயதுடையவர்கள் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் ஜாங் என் கியாங் கூறுகிறார். இவர் இந்த ஆய்வில் முக்கிய பங்காற்றியவர்.

;