ஆசம் கான் மனைவி போட்டி
லக்னோ:
சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் ஆசம் கான். இவர்அண்மையில் நடைபெற்றமக்களவைத் தேர்தலில்,எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப் பட்டதால், அதுவரை வகித்துவந்த எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.தற்போது ராம்பூர் தொகுதிக்கு அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,இங்கு ஆசம் கான் மனைவிதசீன் பாத்திமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராம்பூர் தொகுதியில் ஆசம் கான் 9 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்கரே குடும்ப வேட்பாளர்...
மும்பை:
கடந்த 1966-ஆம் ஆண்டு சிவசேனா கட்சிதொடங்கியது முதல் பால்தாக்கரே முதல் அவரது மகன் உத்தவ் தாக்கரே வரை, அக்குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இதுவரைதேர்தலில் போட்டியிட்டதுஇல்லை. இது பெருமையாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், முதல்முறையாக தாக்கரே குடும்பத்தில் இருந்து, உத்தவ் தாக்கரே-வின் மகன் ஆதித்யா தாக்கரே, வோர்லி தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.
பாஜக-வுக்கு தாவினார் அல்பேஷ்
அகமதாபாத்:
குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் அல்பேஷ் தாக்கூர். பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு தலைவரான இவர், அண்மையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாஜக-வில்இணைந்தார். இந்நிலையில், அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ராதான்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அல்பேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.