tamilnadu

img

அகமதாபாத் சிவில் மருத்துவமனை ஒரு இருட்டுச் சிறை போல உள்ளது.... குஜராத் பாஜக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாக கருதப்படும் அகமதாபாத் சிவில்மருத்துவமனை, தற்போது மர்ம பிரதேசமாக மாறியிருக்கிறது. இங்கு கொரோனா தொற்றுபாதிப்புக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 350 பேர் வரிசையாக இறந்துள்ளனர். 

கொரோனாவுக்கு குஜராத் மாநிலம் முழுவதும் 800 பேர் பலியாகி உள்ளனர் என்றால், இதில்45 சதவிகிதம், அதாவது 350 பேர், அகமதாபாத்மருத்துவமனையில் மட்டும் பலியாகியுள்ளனர்.ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷன் லிமிடெட்நிறுவனத்தின் தரமற்ற ‘தமன்-1’ வெண்டிலேட்டர் களை நோயாளிகளுக்கு பயன்படுத்தியதே அதிகமான இறப்புக்கு காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.“தமன்-1 வெண்டிலேட்டர்களை, வெண்டிலேட்டர் என்றே அழைக்க முடியாது. அதில் எந்த முறையான வசதிகளும் இல்லை. ஆக்சிஜன் மீட்டர் இல்லை. ஈரப்பதமான ஆக்சிஜன் வருவதற்கான வசதி இல்லை. அதனால் நீண்ட நேரத்துக்கு இந்த வெண்டிலேட்டரை நோயாளிக்கு அளிக்க முடியாது. இது அவசர நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிரைப் பறிக்கக்கூடியதாக இந்த வெண்டிலேட்டர்கள் உள்ளன’’என்று அகமதாபாத் மருத்துவ அமைப்பின் அதிகாரி பிபின் படேல் கூறியிருந்தார். ஆனால் சுமார்230 ‘தமன்-1’ வெண்டிலேட்டர்கள் அகமதாபாத் மருத்துவமனையில்தான், நிறுவப்பட்டிருந்தன.

அகமதாபாத் அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட தமன்-1 வெண்டிலேட்டர்கள், நோயாளிகளின் ரத்தக்குழாய்களை சிதைத்து, உயிரிழப்பை ஏற்படுத்தி விட்டதாக காங்கிரஸ் சட்டமன்றக்குழுத் தலைவர் பரேஷ் தனனி உள்ளிட்டோர் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினர்.இந்நிலையில்தான், “குஜராத்தின் சிவில் மருத்துவமனை ஒரு இருட்டுச் சிறையைப் போலஉள்ளது” என்று அகமதாபாத் உயர் நீதிமன்றம் கடுமையாக கூறியுள்ளது.இதுதொடர்பாக குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நிதின்பாய் படேலை கண்டித்துள்ள நீதிமன்றம், “அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்கள், மூன்று அல்லது நான்கு நாட்களில் உயிரிழந்து விடுகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கக்கூடியதாக உள்ளது; மனித வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது; அந்த மனித வாழ்க்கை மருத்துவமனையில் முடிந்து போவதற்கு அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் நிதின்பாய், அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு எத்தனை முறை சென்றுள்ளார்? அங்கு நிலவக்கூடிய சிக்கல்கள் குறித்தும், அங்கு பணிபுரியக்கூடிய மருத்துவ ஊழியர்களிடம் எத்தனை முறைகலந்தாலோசனை மேற்கொண்டுள்ளார்? போதுமான எண்ணிக்கையிலான வெண்டிலேட்டர்கள் இல்லாததால் நோயாளிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்ற கடினமான உண்மையை அரசாங்கம் அறிந்திருக்கிறதா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக, குஜராத் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும், நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி இலேஷ் ஜே வோராஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், அகமதாபாத் சிவில் மருத்துவமனை மீதான புகார்களை விசாரிக்க டாக்டர் அமிபரிக், டாக்டர் அத்வைத் தாக்கூர், டாக்டர் பிபின்அமின் ஆகிய 3 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கும் நீதிமன்றம், மருந்து மற்றும் உபகரணங்கள் தட்டுப்பாடு, மருத்துவர்கள் பற்றாக் குறை, சிகிச்சைக் குறைபாடு, சிகிச்சை அளிப்பதில் பாகுபாடு என அகமதாபாத் மருத்துவமனை மீது வைக்கப்படும் 22 குற்றச்சாட்டுக் களின் உண்மைத்தன்மை குறித்து, மருத்துவர்கள் குழு விசாரிக்கும் என்று தெரிவித்துள் ளது.

;