விருதுநகர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், நகர் செயலாளராகவும் பொறுப்புவகித்து வரும் தோழர் எல்.முருகனின் இரு சக்கர வாகனத்தை சமூக விரோதிகள் இரவேரடு இரவாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். இச் சம்பவத்தை கட்சியின் மாவட்டக்குழு வன்மையாக கண்டித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் அறிக்கையில், கட்சியின் நகர் செயலாளராக தோழர் எல்.முருகன் பொறுப்பு வகித்துவருகிறார். இந்நிலையில் செவ்வாய்க் கிழமை கட்சியின் நகர்குழு கூட்டத்தைமுடித்து விட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்பு, வீட்டின் அருகே அவரது இரு சக்கர வாகனத்தை வழக்கம் போல நிறுத்தி விட்டுஉறங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், நடு இரவு 3 மணிக்கு சமூகவிரோதிகள் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். இதில் வாகனத்தின் பெரும் பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. ஏற்கனவே பாத்திமாநகர் பகுதியில்கடந்த மே. 31 அன்று வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் ஆட்டோமற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும்சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது. எனவே, பாத்திமாநகர் பகுதியில் சமூக விரோத கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும், பெண்கள் மற்றும் குடியிருப்புவாசிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், காவல்துறையினர் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த ஜூன் 2 ம் தேதி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏராளமான பெண்களை திரட்டிபுகார் மனு அளிக்கப்பட்டது. மக்களைபாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், அப்பகுதியில் வசித்து வருகிறோம் என்ற அடிப்படையிலும் நகர்செயலாளர் தோழர் எல்.முருகன் உள் ளிட்ட கட்சித் தோழர்கள் மக்களைத் திரட்டி காவல்துறையினடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த ரவுடிக் கும்பல்கள், செவ்வாய்க்கிழமை நடுஇரவு அவர் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர். இச்சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களையும் ரவுடிகளின் மிரட்டல்களையும் கண்டுமார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் அஞ்சப்போவதில்லை. அதேநேரத் தில் காவல்துறையினர் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் மக்களின் பாதுகாப்புக்கான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்தும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
7 பேர் கைது
கட்சியின் நகர் செயலாளர் தோழர்எல்.முருகன் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனத்தை தீயிட்டு எரித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் கார்த்திக்(28), முருகன் மகன் ஜெயசூர்யா(20), அந்தோணி ஜான் பீட்டர் (21), பாத்திமாநகரைச் சேர்ந்த ஈஸ்வர பாண்டி(19), முத்துராமலிங்கம் நகரைச் சேர்ந்த அன்புசெல்வம்(19), மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் என 7 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ததோடு, கைது செய்து சிறையில் அடைத்தனர்.