சென்னை, ஆக. 7- வீடுகளில் மழைநீர் சேமிப்பை சவாலாக எடுத்து செயல் படவேண் டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலு மணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்த விழிப்புணர்வு பிரச் சாரத்தை மக்களிடையே பிரபலங்க ளுக்கு அவர் வேண்டுகோள் விடுத் துள்ளார். தமிழ்நாட்டில் காலம் தவ றிய பருவமழையால் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதால் தண்ணீ ருக்காக மக்கள் காலிக்குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மழைநீர் சேகரிப்பு திட்டத்தை வீட்டுக்கு வீடு நடைமுறைப்படுத்த டிஜிட்டல் பிரச்சாரத்தை கடந்த மாதம் 22 ஆம்தேதி தொடங்கினார். தமிழ்நாடு நீர்வளம் நமக்காக. நாட்டுக்காக நாளைக்காக என்ற பெயரில் இந்த பிரச்சாரம் தொடங்கப் பட்டுள்ளது. பருவ மழைக்கு முன்பு மழைநீர் சேமிப்பை உறுதிசெய்ய வேண்டும் என ட்விட்டர் பதிவு வழி யாக வேண்டுகோள் விடுத்தார்.