tamilnadu

img

ஒரே நாளில் 610 பேர்: அச்சத்தில் விருதுநகர் மக்கள்... தமிழக முதல்வர் தலையிட கோரிக்கை

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில்மட்டும் 610 பேர் தொற்றால்  பாதிக்கப் பட்டுள்ளனர். மாவட்டத்தில் சமூக பரவலாக மாறி விட்டதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை கிணற்றில் போட்ட கல்லாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

விருதுநகர் மாவட்டத்தில் செவ் வாய்க்கிழமை ஒரே நாளில் 610 பேர்கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் தொடக்கம் முதல் கொரோனாவை கட்டுப்படுத்த போதிய அக்கறை காட்டவில்லை. கொரோனா பரிசோதனைக் காக மாதிரி கொடுத்தால் ஐந்து முதல்ஆறு நாட்கள் கழித்தே முடிவுகள் வெளியாகிறது. இதனால், மாதிரி கொடுத்தவர்கள் அதுவரை பொது வெளியில் நடமாடி வந்தனர். இதுவும்  தொற்று பரவுவதற்கு காரணமாகியுள்ளது. ஒரே ஒரு ஆர்.டி.பி.சி.ஆர் இயந்திரம்  மூலமே தொடக்க காலத்தில் பரிசோதனை நடைபெற்றது.  மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின்  போராட்டம் காரணமாக  மூன்று இயந்திரங்கள் மூலம் ஜூலை 15ஆம் தேதி முதல் பரிசோதனை செய்யப்படுகிறது.

நோயைக் கட்டுப்படுத்த எவ்விதநடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் தற்போதுவரை செய்யவில்லை. மக்கள் கூடும் இடங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கபசுர குடிநீர்முறையாக வழங்கவில்லை. விருதுநகர்,  இராஜபாளையம் பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டஇயக்கங்கள் கபசுர குடிநீர் வழங்குதல், ஹோமியோ மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்குதல் பணிகளை  செய்து வருகின்றனர்.மாவட்ட நிர்வாகம் இதற்காக ஒருசிறு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லையென மக்கள் தங்களது  கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தேவையற்ற ஊரடங்கு  
 அனைத்து ஊர்களிலும் உள்ள வர்த்தகர் சங்க நிர்வாகிகளை வர வழைத்து மாலை மூன்று மணிக்குள் கடையை அடைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து, சங்கத்தினர் கடையை மூன்று மணியுடன் கடையை அடைத்து விடுகின்றனர். இதனால், மதியம் இரண்டு மணி முதல் மூன்று மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் காய்கறி சந்தை,  பல சரக்குகடைகளில் அதிகரிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப் பட்ட முழு உரடங்கால் தொற்று அதிகஅளவில் பரவும் நிலையே ஏற்பட்டது.அதற்குக் காரணம் சனிக்கிழமை அனைத்து இறைச்சிக் கடைகளிலும், மார்க்கெட்டுகளிலும் கூட்டம் அலை மோதியது.

உண்மைக்கு புறம்பாக பேசி வரும் ஆட்சியர் 
தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் கண்ணன், அரசியல் கட்சியினரைச் சந்தித்து மனுக்களை பெறுவதில்ல. அலுவலகத்தில் அமர்ந்துகொண்டே பணிகளை கவனித்து வருகிறாராம்.  ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவோரை சந்திப்பதில்லை. திருவில்லிபுத்தூரில் கடந்த சனிக்கிழமைமுதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கடைகளையும் அடைக்க வேண்டுமென காவல்துறை மூலம் நிர்ப்பந்தம் செய்யப்பட்டுவருகிறது. ஆனால், ஆட்சியரோ, நான் முழு ஊரடங்கு அறிவிக்கவில்லை, வியாபாரிகளை மூன்று மணிக்கே கடைகளை அடைக்க நிர்ப்பந்தம் செய்யவில்லையென முழு பூசணிக் காயை சோற்றில் மறைக்கும் வேலையை செய்துவருகிறார்.

திருவில்லிபுத்தூரில்...
திருவில்லிபுத்தூரைப் பொறுத்தவரை தொற்றின் தாக்கம் ஆறு வார்டுபகுதிகளில் மட்டுமே உள்ளது. நிலைமை இவ்வாறிருக்க ஊர் முழுவதும் ஊரடங்கு எதற்கு என்பது பற்றிஆட்சியரால் விளக்க முடியவில்லை. அதேநேரத்தில் மாவட்டம் முழுவதும்தொற்று அதிகமுள்ள 166 பகுதிகளில் மட்டும் மக்கள் நடமாடவும், பொருட்கள் விற்பனை செய்யவும் தடை செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சிறப்பு அதிகாரி எங்கே? 
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த  அரசு சிறப்பு அதிகாரியாக மதுமதியை நியமித்தது. ஒரே ஒரு நாள்ஆய்வுக் கூட்டம் நடத்தி பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்து விட்டுச் சென்றவர் தான். தற்போது வரை விருதுநகர் பக்கம் வரவில்லை. இந்த நிலையில் எப்படி நோய் தொற்றை தடுக்க முடியும் என மக்கள்கேள்வி எழுப்புகின்றனர். தமிழக அரசு, வேறு சிறந்த அதிகாரிகளை விருதுநகர் மாவட்டத்திற்கு நியமிக்க வேண்டும். அதே நேரத்தில் அதிகரித்துவரும் தொற்றை கட்டுப்படுத்தமுதல்வர்  தனிக் கவனம் செலுத்தவேண்டும். தவறும்பட்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினம்தோறும் பாதிக்கப்படுவர். பின்னர் வீதிகளில் இறங்கி மக்கள் போராடுவார்கள் அதைத் தவிர அவர்களுக்கு வேறு
வழியில்லை என்பது மட்டும் உண்மை.

கவலைக்கிடமான நிலையில் தேனி
தேனி மாவட்டத்திலும் கொரோனாதொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் அரசுமருத்துவர், ராணுவ வீரர், காவலர், தபால்நிலைய ஊழியர் உட்பட194 பேருக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா உறுதி செய்யப்பட்டுள் ளது. சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். தேனியில் தொற்றால் 4,053 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 பேர் பலியாகியுள்ளனர். இங்கும்நிலைமை ஒன்றும் சொல்லிக்கொள்ளுமளவிற்கு இல்லை. துணைமுதல் வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியின் நிலையை நினைத்தால் கவலையாக உள்ளது.குறிப்பாக இந்த மாவட்டத்தில் காவலர்கள், அரசு ஊழியர்கள் தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்திற்கு பொருத்தமான அதிகாரியை நியமிக்க வேண்டும். இல்லையெனில் இந்த மாவட்டமும் போராட் டக் களம் காண வேண்டிய நிலைக்குசென்றுவிடும் என்பதில் ஐயமில்லை. 

நமது நிருபர்கள்