தில்லி
தற்போதைய நவீன உலகில் வாட்ஸ் அப் என அழைக்கப்படும் தகவல் பரிமாற்ற செயலி முக்கிய வகிக்கிறது. இந்த செயலில் வதந்திகளும், பொய் செய்திகளும் அடிக்கடி பரப்பப்படுகின்றன. இதனால் ஒரு தகவலை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே அனுப்பும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. இந்த நடைமுறை கொண்டு வந்த போதிலும் போலிச் செய்திகளின் பரவல் குறைந்தபாடில்லை.
தற்போதைய சூழ்நிலையில் உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் விஷயத்திலும் பல போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருவதால் ஒரு தகவலை ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.