tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

தற்போதைய விளையாட்டு உலகில் போட்டியை நடத்துபவர்கள், வர்ணனையாளர்கள், ஊடகங்கள் என அனைவருக்கும் ஒரே ஒரு நாடு அதிக சிரமத்தைத் தருகிறது. சுற்றுலா வலம் மிக்க அந்த நாடு ஊக்கமருந்து, விதிமீறிச் செயல்படுதல் மூலம் தொல்லை தரவில்லை. வெறும் பெயர்கள் மூலம் தான். அந்த நாட்டின் பெயர் தாய்லாந்து. தாய்லாந்து மக்களின் பெயர்கள் சராசரியாக 22 எழுத்துக்கள் (ஆங்கிலத்தில்) கொண்டதாக இருக்கும். விளையாட்டு போட்டிகளின் போது தாய்லாந்து வீரர்களின் பெயரை உச்சரிக்கப் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுகிறார்கள். தாய்லாந்து வீரர்களின் பெயர் சிரமத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பேட்மிண்டன் துறையாகும்.