tamilnadu

img

நிவாரணம் வழங்க வீடியோ புகைப்படக் கலைஞர்கள் கோரிக்கை

விருதுநகர், ஜூன் 15- கொரோனா பொது முடக்கத்தால் வேலையின்றி தவித்து வரும் வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: பொது முடக்கத்தால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறோம். எனவே, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை வழக்கம் போல நடத்த அனுமதிக்க வேண்டும். மாதம் ரூ.2 ஆயி ரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். கட்டாய இ.எம்.ஐ வசூல், அபராத வட்டியை தடுத்து நிறுத்த வேண்டும். மின் கட்டணம் மற்றும் கடை வாடகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு வில் தெரிவித்துள்ளனர்.