ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மாயத்தேவன் பட்டியில் ஜெயராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது இதில் மொத்தம் 60க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் இந்நிலையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது இதில் 3 அறைகள் சேதமடைந்தன இந்த தொழிலாளர்கள் கார்த்திகேயன், புள்ளகுட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
ரசாயன கலவை உராய்வால் இந்த விபத்து நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் 3 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது