விழுப்புரம், ஜூன் 13- சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து கடலூர், மதுரை, திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் இல்லாமல் மோட்டார் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் வரு பவர்களை கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடு பட்டுள்ளனர். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங் கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வாகனங்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை மீண்டும் சென்னைக்கே அனுப்பி வைத்தனர். அதோடு அவர் கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதமும் வசூலித்தனர்