tamilnadu

நிவாரணம் கோரி போராடிய மாற்றுத் திறனாளிகள் மீது வழக்குப் பதிவு : சிபிஎம் கண்டனம்

விருதுநகர், மே  9- ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள மாற்றுத் திறனாளி கள் நிவாரணத் தொகை, உணவு மற்றும் மருந்து பொ ருட்கள் கோரி அரசு அலுவல கங்களில் குடியேறும் போரா ட்டம் நடத்தினர். அவர்கள் மீது விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவ ல்துறையினரின் இச்செய லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது.  இதுகுறித்து  கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. அர்ஜூனன் அறிக்கை வெளி யிட்டுள்ளார். அதில் கூறியி ருப்பதாவது :  கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இத னால், சாதாரண ஏழை, எளிய மக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.

அதிலும் மாற்றுத் திறனாளிகள்  மிகக் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு, தங்களுக்கு நிவாரணத் தொ கையாக ரூ.5 ஆயிரம் வழங்க  வேண்டும். உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இல வசமாக வழங்க வேண்டு மென வலியுறுத்தி  அரசு அலு வலகங்களில்  மே,7 இல் சமூக இடைவெளியுடன் குடை பிடித்தபடி  குடியேறும் போ ராட்டம் நடத்தினர். ஆனால், விருதுநகர் மாவட்ட காவல்து றையினர், போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மீது,  144 தடை உத்தரவை மீறி கூடிய தாக வழக்குப் பதிவு செய்து ள்ளனர். இதனை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரணத் தொகை, உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்காமல், போராடியவர்கள் மீது காவல்து றையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, உடனடியாக போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என அந்த  அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.