திருவில்லிபுத்தூர், மே 21- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாலுச் சாமி வயது 65. செங்குளம் பகுதியின் ஊர் உதவித் தலைவர் ஆக இருந்து வந்தார். இவர் வியாழனன்று காலை அந்த பகுதியில் உள்ள கண்மாய் மடை பகுதி யில் நின்று கொண்டிருந்தார். அப்போது அருண் பாண்டியன் என்பவர் பாலு சாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார். ப்போது அருண்பாண்டியன், தான் வைத்திருந்த கத்தியால் பால் சாமியை கத்தியால் குத்தி உள்ளார். பாலுச்சாமி மகன் முனீஸ்வரன் ஓடிவந்து தடுக்க முயன்றுள்ளார். அவருக்கும் கத்திகுத்து காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் திருவில்லி புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டனர். பாலுச்சாமி யை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதற்கிடையே பாலுச்சாமி கொலை செய்த அருண்பாண்டியனை திருவில்லி புத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர்.