விழுப்புரம், நவ.16- விழுப்புரம் கோட்டாட்சி யர் ராஜேந்திரன் தலைமை யில் விழுப்புரம், விக்கிர வாண்டி, வானூர் தாலுகா உட்பட்ட விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியர்கள் பார்த்தீபன், சுரேஷ் வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை கள் தர வேண்டிய பாக்கித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முண்டியம்பா க்கம் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை பாக்கி தொகை தருவ தில் அதிக காலதாமதம் செய்கிறது. எனவே நிர்வாகத்துடன் பேசி விரைந்து பாக்கித் தொகை தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் எத்தனை ஏரிகளில் குடிமராமாத்து பணி செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை தெரிவிக்க வேண்டும், ஏரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், விவசாய துறை மூலம் விற்பனை செய்யப்படும் விதைகள் தரமற்று உள்ளது. எனவே தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும், இருளர் இன மக்களுக்கு சாதிச்சான்று வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். அதனை தொடர்ந்து கோட்டாட்சியர் ராஜேந்திரன் விவசாயிகள் கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கூட்டத்தில் சம்மந்த ப்பட்ட துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கேள்வி கேட்ட போது அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டங்கள் கண்துடைப்புகாகவே நடத்தப்படுவதாக குற்றம் சாட்டினர்.