விழுப்புரம், ஆக. 20- திண்டிவனம் அருகே போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டிவனத்தை அடுத்த தென்பசியார் ஏரிக்கரை பகுதியில் போலி மதுபானம் தயார் செய்வததாக மதுவிலக்கு காவல் துறையின ருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதை யடுத்து ஆய்வாளர் கீதா, மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் காவல் துறையினர் ஏரி பகுதி யில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது ஏரியில் உள்ள ஓடையில் போலி மதுபானம் தயாரித்துக் கொண்டி ருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, ஆனந்தபாபு, நாராயணன், அன்பு, வீரப்பன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள், 4 பேரல், 15 தண்ணீர் கேன்கள், 35 லிட்டர் சாராய கேன்கள், ஆலோகிராம் ஸ்டிக்கர், மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய கருவிகள், மினி டெம்போ வேன், இருசக்கர வாகனம் இரண்டு உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் மதுபானம் தயார் செய்து எந்த பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது, போலி மாதுபான பாட்டில்களில் ஒட்டும் ஹாலோ கிராம் ஸ்டிக்கர் எங்கு அச்சடிக்கப் படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.