திருவில்லிபுத்தூர், மே 19- கொரோனா பரவல் காரணமாக அர சுப் போக்குவரத்துக்கழக பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயங்கவில்லை. ஆனால், அரசு ஊழியர்களை அழைத்துச் செல்ல பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன டிப்படையில் திருவில்லிபுத்தூர், சிவ காசி, இராஜபாளையம், காரியாபட்டி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களிலி ருந்து 8 பேருந்துகள் இயக்கப்பட்டன.