tamilnadu

img

வெம்பக்கோட்டை அகழாய்வில் அணிகலன்கள் கண்டெடுப்பு!

விருதுநகர்,பிப்.20 - வெம்பக்கோட்டை அகழாய்வில் அகேட் போன்ற அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் நடைபெறும் 3ஆம் கட்ட அகழாய்வில் அகேட் என்னும் கல்மணி, பச்சை நிறத்திலான கண்ணாடி மணிகள், சுடு மண்ணால் செய்யப்பட்ட சதுரங்க ஆட்டக்காய், சங்கு வளையல் ஆகியவை கிடைத்துள்ளன.
வெம்பக்கோட்டையில் இதுவரை 3,600-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக அகழாய்வு இயக்குநர் பொன் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.