மினி உலகக்கோப்பை 2025 இன்று நட்சத்திர ஆட்டம்
கிரிக்கெட் உலகில் மினி உல கக்கோப்பை என அழைக்கப் படும் சாம்பியன்ஸ் தொடரின் 9 ஆவது சீசன் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும்) நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை அன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் கிரிக்கெட் உலகில் எலியும், பூனையுமாக மோதிக் கொள்ளும் ஆஸ்திரேலியா - இங்கி லாந்து (குரூப் ஏ) அணிகள் மோது கின்றன. நடப்பு சீசனின் மினி உல கக்கோப்பையில் முதல் வெற்றியை ருசிக்கும் முனைப்பில் இரு அணி களும் தீவிர பயிற்சியுடன் களமிறங்கு வதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படு கிறது.
சமாளிக்குமா ஆஸ்திரேலியா?
தனிப்பட்ட காரணங்களால் மூத்த வீரர்கள் கம்மின்ஸ், மிட்சல் மார்ஷ், ஸ்டாய்னிஸ் (ஒருநாள் போட்டி களில் ஓய்வு), ஸ்டார்க் மினி உல கக்கோப்பையில் இருந்து விலகி யுள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் 65% அள விலான பலத்திலேயே களமிறங்கு கிறது. பேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணி ஓரளவு நல்ல வீரர்களுடன் பல மாக இருந்தாலும், பந்துவீச்சில் பலம் குறைந்த அணியாகவே உள்ளது. இதனால் அந்த அணி இங்கிலாந்து அணியை எப்படி சமாளிக்கிறது என்ப தை பொறுத்திருந்து பார்க்கலாம்.