tamilnadu

img

விளை நிலங்களின் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு- விவசாயிகள் கைது

ஈரோடு, ஜூன் 12- விவசாய விளை நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் பவர் கிரிட் நிறு வனம் தமிழகத்தின் கோவை, திருப் பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 13 மாவட்ட விவசாய நிலங் கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. ஆனால், இத்திட் டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சாலை யோரங்களில் கேபிள் மூலமாக மின் திட்டங்களை செயல்படுத்தக்கோரியும் கடந்த மூன்றாண்டு காலமாக விவ சாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக நில அளவீட்டு  பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது நில அளவீடு பணிகளை பவர் கிரிட் நிறு வனம் மீண்டும் துவங்கியிருக்கிறது. இதன்ஒருபகுதியாக புதனன்று  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளைம் அருகேயுள்ள பெரியபுலியுர் ஊராட்சிக்குட்பட்ட வளையக்காரன் பாளையம் பகுதியில் உயரழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைய டுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவ சாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள் பி.பி.குணசேகரன், எம்.முனு சாமி, பெருமாள், கவின், கிருஷ்ண குமார், ராசு, அருள் குணசேகர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்டோரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று அராஜகமான முறையில் கைது செய் தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

பேச்சுவார்த்தை நடத்துக

இதேபோல், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், பள்ளி பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காடச்சநல்லூர் பகுதியில் விவசாயி கள் கருப்புக் கொடியுடன் ஆடு, மாடுக ளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள் தலைமை வகித்தார். கூட்ட மைப்பின் நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், செல்லமுத்து, பட்லூர் மணி, வரதராஜ், சின்ன ஆனங்கூர் பழனிச்சாமி, பாதரை  செங்கோட்டையன், உப்புக்குளம் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் மாற்று வழியில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண் டும். மின்சாரத்துறை அமைச்சர் உடனடி யாக விவசாயிகள் அழைத்துப் பேசி  தீர்வு காண வேண்டும். விவசாயி களை நிர்ப்பந்தப்படுத்துவது, காவல் துறையை பயன்படுத்தி அத்துமீறி தாக்குதல், பொய் வழக்குப் போடுவது, சிறையில் அடைப்பது போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.