விழுப்புரம் மாவட்டம் கண்டமங்களம் சுரேஷ் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து பணியாற்றிய இளைஞர்.கண்டமங்களம் அருகில் உள்ள சத்திரம் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தின் அடையாளமாக அறியப்பட்டவர் இளைஞர் சுரேஷ். உள்ளாட்சி நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகார வர்க்கத்தினர் சாலை போடுவதில் செய்த ஊழல்களைத் தட்டிக் கேட்டார் சுரேஷ். வெண்கொடி இயக்கத்தின் வளர்ச்சிக்கும் அப்பகுதியில் நிகழ்ந்த அநீதிக்கெதிரான போராட்டங்களுக்கும் காரண
மான சுரேஷ் இருக்கும்வரை தங்களது ஆதிக்கம் நிலைக்காதுஎன உணர்ந்த கயவர் கூட்டம் சுரேஷைத் தீர்த்துக் கட்ட தீர்மானித்தது.அதன்படி 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் நாள் தோழர் சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் விழுப்புரம் மாவட்டத்தில் அவரது நினைவுகளை நெஞ்சில் சுமந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வீறு கொண்டு எழுந்தது தனி வரலாறு. தோழர் சுரேஷின் தியாகத்தைப் போற்றி மேன்மேலும் முன்னேறுவோம்.