tamilnadu

img

ஜார்ஜ் பிளாயிடுக்கு பல்லாயிரம் பேர் அஞ்சலி...

வாஷிங்டன், ஜுன் 7- அமெரிக்காவில் காவல்துறையினர் நிற வெறியுடன் கொடூரமாக கொலை செய்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாயிடுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  மூன்று நகரங்களில் கடந்த ஆறு நாட்க ளில் தொடர்ச்சியான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் முதன்மையானது வியாழக்கிழமை மின்னாபொலிஸில் நடை பெற்றதாகும். அங்குதான் பிளாய்ட் கொல் லப்பட்டார். இதுபோன்ற பல்வேறு நகரங்களி லும் பிளாயிடை நினைவுகூர்ந்து அணிவகுப்பு கள் நடைபெற்றன.  பிளாயிடின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள வடக்க கரோலினா ரேபோடில் சனி யன்றும், பிளாயிட் தனது பால்ய வயது முதல் வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்த ஹூஸ்டனில் திங்களன்றும் அஞ்சலி நிகழ்ச்சி கள் நடைபெற உள்ளன.

மின்னாபொலிஸ் அஞ்சலி நிகழ்ச்சியில் ஜார்ஜ் பிளாயிடின் சகோதரர் பிலியோன்ஸ் பிளாயிட், ரெவ். ஜெஸ்ஸி ஜாக்சன், செனட்டர் எமி க்ளோபாச் சாரா, பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் இல்ஹான் உமர் மற்றும் ஷீலா ஜாக்சன் ஆகியோர் பேசினர். இங்கும் வேறு சில அணிவகுப்புகளிலும் ஜார்ஜ் பிளாயிடின் கழுத்தில் வெள்ளைக்கார காவல் அதிகாரி டெரிக் ஷோவின் கால்முட்டியை அழுத்தி மூச்சுத்திணற வைத்ததை குறிக்கும் வகை யில் மக்கள் 8.46 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.  ஜார்ஜின் சகோதரர் டெரன்ஸ் நியூயார்க் கின் புரூக்ளினில் நடந்த அணிவகுப்பில் கலந்து கொண்டார். “பிளாய்டின் கறுப்பு வாழ்க்கை மதிப்புக்குரியது, நீதி இல்லை யேல் அமைதி இல்லை” போன்ற முழக்கங் கள் எழுதப்பட்ட பதாகைகளை மக்கள் கை களில் ஏந்தி அணிவகுத்துச் சென்றனர்.

முழக்கங்களைத் தவிர, சில இசை மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பிளாய்ட் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு வார கால தொடர் வன்முறை போரா ட்டங்கள் தொடர்பாக 10,000 க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையின் துப்பாக்கிச் சூடு போன்ற வற்றில் பத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பிளாய்டை கொன்ற ஷோ வின் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள் ளது. உடன் இருந்த மேலும் மூன்று காவல் துறையினர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.